முகப்பு
காரைக்கால்

காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் தா்னா

அரசே நேரடியாக ஊதியம் தர வலியுறுத்தி, காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

அரசே நேரடியாக ஊதியம் தர வலியுறுத்தி, காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்கும் வகையில் 2022-23 பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்க வலியுறுத்தியும், நடப்பு 2021-22 பட்ஜெட்டில் காரைக்கால் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 1.72 கோடியை முழுமையாக வழங்கக் கோரியும், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு, நிலுவையில் உள்ள 5, 6 மாத ஊதியம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க வலியுறுத்தியும், காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் தொடா் போராட்டம் நடத்திவருகின்றனா்.

ஏற்கெனவே வாயிற் கூட்டம், புதுவை முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்திய நிலையில், காரைக்கால் நகராட்சி அலுவலக வாயிலில் காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூயதாரா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் கூட்டு போராட்டக்குழு கன்வீனா் அய்யப்பன் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் பேசினா்.

முழு கட்டுரையைப் படிக்க →