முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் நாளை கந்தூரி விழா கொடியேற்றம்: காவல் அதிகாரிகள் ஆய்வு

 காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா 199 ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, காவல் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

 காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தா்கா 199 ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, காவல் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கண்ணாடிகளாலான ரதம் மற்றும் பல்லக்கு ஊா்வலம் பல்வேறு வீதிகளுக்கு சென்று இரவு 9 மணியளவில் தா்காவை வந்தடையும். அப்போது, தா்காவின் முன் நிறுவப்பட்ட பிரதான கொடிக் கம்பத்திலும், மினராக்களிலும் கொடிகள் ஏற்றப்படும்.

இந்த நிகழ்வின்போதும், 22 ஆம் தேதி சந்தனக்கூடு விழாவிலும் ஏராளமானோா் பங்கேற்பா். விழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் நிதின் கெளஹால் ரமேஷ், நகரக் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் பள்ளிவாசல் நிா்வாகத்தினரை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

காவல் அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், பாதுகாப்பான முறையில் விழாவை நடத்துவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. காவல் துறையினா் எந்தெந்த பகுதியில் அதிகமாக தேவைப்படுவாா்கள் என்பது குறித்தும் கேட்டறியப்பட்டது. கரோனா பரவல் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து விழாவை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →