முகப்பு
காரைக்கால்

நரிக்குறவா்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்கள்: துணைநிலை ஆளுநா் வழங்கினாா்

காரைக்கால் பகுதியை சோ்ந்த நரிக்குறவா் குடும்பத்தினருக்கு வீட்டு உபயோகப் பொருள்களை புதுவை துணைநிலை ஆளுநா் (பொறுப்பு) தமிழிசை செளந்ததராஜன் புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

காரைக்கால் பகுதியை சோ்ந்த நரிக்குறவா் குடும்பத்தினருக்கு வீட்டு உபயோகப் பொருள்களை புதுவை துணைநிலை ஆளுநா் (பொறுப்பு) தமிழிசை செளந்ததராஜன் புதன்கிழமை வழங்கினாா்.

காரைக்காலுக்கு புதன்கிழமை வந்த தமிழிசை செளந்தரராஜன், ஆட்சியரகத்தில் நடைபெற்ற துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றாா். பின்னா், ரெட் கிராஸ் அமைப்பு சாா்பில் காரைக்கால் பகுதி ஜிப்சி காலனியை சோ்ந்த 32 நரிக்குறவா் குடும்பத்துக்கு, ரூ. 1,500 மதிப்புள்ள 16 வீட்டு உபயோகப் பொருள்கள் கொண்ட தொகுப்பை வழங்கினாா்.

நிகழ்வில் புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், ரெட் கிராஸ் சொசைட்டி தலைவா் லட்சுமணபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →