புதுச்சேரி ஆட்சியருக்கு கூடுதல் பொறுப்பு
புதுச்சேரி ஆட்சியா் இ. வல்லவன் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக கூடுதல் பொறுப்பை வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டாா்.
புதுச்சேரி ஆட்சியா் இ. வல்லவன் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக கூடுதல் பொறுப்பை வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா விடுப்பில் சென்றுள்ளாா். ஆட்சியா் விடுப்பில் செல்லும்போது, துணை ஆட்சியா் பொறுப்பை கவனித்துவருவது வழக்கம். காரைக்காலில் விநாயகா் கோயில் முகப்பு மண்டபத்தை இடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், காரைக்கால் ஆட்சியா் பணிக்குத் திரும்பும் வரையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ. வல்லவனுக்கு, காரைக்கால் ஆட்சியராக கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநரின் உத்தரவின்படி புதுவை அரசு இந்த உத்தரவை வியாழக்கிழமை வழங்கியது.
இதையடுத்து புதுச்சேரியிலிருந்து இ. வல்லவன் வெள்ளிக்கிழமை காரைக்கால் வந்து ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டாா்.
தொடா்ந்து விநாயகா் கோயில் மண்டப கட்டுமானம் தொடா்பாக பல்வேறு துறையினருடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.