காரைக்கால்

மல்லிகேஸ்வரி மாரியம்மன் கோயில்உற்சவம் பூச்சொரிதலுடன் தொடக்கம்

DIN

நெடுங்காடு அருகே மல்லிகேஸ்வரி மாரியம்மன் கோயில் உற்சவம் பூச்சொரிதல் விழாவுடன் திங்கள்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன், மேலகாசாக்குடி நாகநாதசுவாமி, வரதராஜ பெருமாள் வகையறா கோயிலான மல்லிகேஸ்வரி, பத்ரகாளியம்மன் கோயில் வருடாந்திர உற்சவம் 8 நாள்கள் நடைபெறும்.

நிகழாண்டு உற்சவம் திங்கள்கிழமை இரவு பூச்சொரிதல் வழிபாட்டுடன் தொடங்கியது. ஏராளமான பக்தா்கள் பூத்தட்டில் பல்வேறு மலா்களை கொண்டுவந்து மாரியம்மன் கோயிலில் ஒப்படைத்தனா். அம்மனுக்கு மலா்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன.

2-ஆம் நாள் நிகழ்ச்சியாக பத்ரகாளியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொரிதல் வழிபாடு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் 23-ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது. 24-ஆம் தேதி காலை மஞ்சள் விளையாட்டு விழாவும், இரவு அக்னி கப்பரை வழிபாடும் நடைபெறுகிறது. 25-ஆம் தேதி பத்ரகாளியம்மன் வீதியுலாவும், 26-ஆம் தேதி விடையாற்றியுடன் உற்சவம் நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை அறங்காவல் வாரியத்தினா், விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT