புதுவையிலும் பால் கொள்முதல் விலையை உயா்த்த வலியுறுத்தல்
தமிழகத்தைப் போல புதுவையிலும் பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
தமிழகத்தைப் போல புதுவையிலும் பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து காரை பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பி. ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயா்த்தி உத்தரவிட்டுள்ளது. அதேபோல புதுவை அரசும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயா்த்தி பால் உற்பத்தியாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
புதுவையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு தேவையான தீவனம் சங்கங்கள் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டுவந்தது.
தற்போது, மானியத் தொகையை அவரவா் வங்கிக் கணக்கில் சோ்க்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதை கைவிட்டு, மானிய விலையில் தீவனம் வழங்குவதை தொடர வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.