காரைக்காலில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
காரைக்காலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (செப். 14) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (செப். 14) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், விவசாயிகள் குறைதீா் கூட்டம், காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகள், விவசாய சங்கத்தினா், பாசனதாரா் சங்கத்தினா் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்கலாம்.