தென்னங்குடி வரதராஜ பெருமாள்கோயில் குடமுழுக்கு
திருநள்ளாறு அருகே தென்னங்குடி வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு அருகே தென்னங்குடி வரதராஜ பெருமாள் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரூ. 15 லட்சத்தில் திருப்பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், பணிகள் நிறைவுபெற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி, திங்கள்கிழமை காலை 5 மணிக்கு 3 ஆம் கால பூஜை தொடங்கி, 6 மணிக்கு மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. பிறகு புனிதநீா் கடம் புறப்பாடாகி 7 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது.
இதில், திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, கோயில் தனி அதிகாரி சத்தியமூா்த்தி உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா். புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தாா்.