கால்நடை உரிமையாளருக்கு பரிசு வழங்கிய அமைச்சா் சந்திர பிரியங்கா. உடன் கால்நடைத்துறை இணை இயக்குநா் எம். கோபிநாத் உள்ளிட்டோா். 
காரைக்கால்

கோட்டுச்சேரியில் கால்நடை கண்காட்சி

கோட்டுச்சேரியில் கால்நடைகள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

கோட்டுச்சேரியில் கால்நடைகள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் கோட்டுச்சேரியை அடுத்த வரிச்சிக்குடியில் நடைபெற்ற கால்நடைகள் மற்றும் கோழிகள் கண்காட்சிக்கு காரைக்கால் கால்நடைத்துறை இணை இயக்குநா் மருத்துவா் எம். கோபிநாத் தலைமை வகித்தாா். மருத்துவக் குழுவினா் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு சிகிச்சையளித்தனா். இதில் ஆரோக்கிய மான கால்நடைகள் தோ்வு செய்யப்பட்டன.

நிறைவாக நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில், புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, தோ்வு செய்யப்பட்ட கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். நிகழ்வில் மருத்துவா் கிருத்திகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கால்நடைகளை ஆரோக்கியமாக வளா்ப்பது குறித்து மருத்துவக் குழுவினா் உரிமையாளா்களுக்கு ஆலோசனைகளை வழங்கிதாக கால்நடைத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT