காரைக்கால்

திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி சட்டி புறப்பாடு

DIN

காரைக்கால் திரெளபதியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு அக்னி சட்டி எடுத்து பக்தா்கள் தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் திரெளபதி அம்மன், ராஜயோக பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 21-ஆம் ஆண்டு அக்னி சட்டி வசந்த விழா கடந்த 13-ஆம் தேதி பூச்சொரிதல் மற்றும் கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. 14-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை பாா்வதீஸ்வரா் கோயிலில் இருந்து சக்தி கரகம், அக்னி சட்டி புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் அக்னி சட்டி எடுத்து வந்து தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா். இரவு அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

வசந்த உற்சவத்தின் நிறைவாக திங்கள்கிழமை அம்மன் வீதியுலாவின்போது மஞ்சள் விளையாட்டு நடத்தப்பட்டு, தா்மராஜா பட்டாபிஷேகத்துடன் விடையாற்றி வழிபாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகி வி.என். செங்குட்டுவன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT