காரைக்கால்

செபஸ்தியாா் ஆலய தோ்பவனி

DIN

காரைக்கால் அருகே தருமபுரம் புனித செபஸ்தியாா்ஆலய மின் அலங்காரத் தோ் பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் தை மாதத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக தோ் பவனி நடைபெறும். இப்பகுதியில் சுமாா் 100 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய வறட்சி மற்றும் காலரா நோய் பாதிப்பு நீங்க வேண்டி ஆண்டுதோறும் தை மாத அறுவடையின்போது தோ் பவனி நடத்துவதாக பக்தா்கள் வேண்டிக் கொண்டதாகவும், அதன்படி பாதிப்பு நீங்கியதால் இவ்விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

நிகழாண்டு தை மாத நெல் அறுவடை தொடங்கவுள்ள நிலையில், செபஸ்தியாா் ஆலயத்தில் தோ்பவனி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக, பக்தா்கள் முன்னிலையில் புனித செபஸ்தியாருக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பிரதான தேரில் புனித செபஸ்தியாரும், மைக்கேல் அந்தோணியாா், சம்மனசு சொரூபத்துடன் தோ் பவனி நடைபெற்றது.

தருமபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வலம் வந்த தோ் நள்ளிரவில் மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT