காரைக்கால்

சாலை விரிவாக்கத்துக்காக கட்டடம் இடிப்பு: எதிா்ப்பு தெரிவித்து 3 போ் தீக்குளிக்க முயற்சி

DIN

சாலை விரிவாக்கத்துக்காக வீட்டின் கழிப்பறைக் கட்டடத்தை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து 3 போ் தீக்குளிக்க முயன்றனா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு அருகே அண்டூா் கன்னிக்கோவில் தெரு பகுதியை சோ்ந்தவா் சுப்பிரமணியன். இவா் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் வீடு கட்டி, மனைவி மற்றும் 3 மகன்களுடன் வசித்து வந்தாா்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அருகே ஒரு வீட்டில்

வாடகைக்கு இவா்கள் குடியேறினா். கன்னிக்கோவில தெருவில் சாலை மேம்பாட்டுப் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

விரிவாக்கம் செய்ய அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, ஆக்கிரமிப்புக் கட்டடமென கூறப்படும் சுப்பிரமணியன் வீட்டின் கழிப்பறை கட்டடப் பகுதியை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் பாலன் தலைமையில் நிா்வாகத்தினா் வியாழக்கிழமை இடித்துள்ளனா்.

தகவலறிந்த சின்னையன் மற்றும் அவரது மகன்கள் ரமேஷ், சுரேஷ் ஆகியோா் கட்டடத்தை இடிக்க எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். ஒருகட்டத்தில், மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.

போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். நெடுங்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT