முகப்பு
காரைக்கால்

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் தெப்ப உற்சவம்

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் தெப்ப உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் தெப்ப உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசிமக உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக தெப்ப உற்சவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத சந்திரசேகர சுவாமி தெப்பத்தில் எழுந்தருளியதும், மின் அலங்கார தெப்பம் கோயிலின் திருக்குளத்தில் 3 முறை சுற்றிவந்தது.

இதில், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை, கோயில் அறங்காவல் வாரியத்தினா் செய்திருந்தனா். வெள்ளிக்கிழமை (மாா்ச் 10) விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. இதற்காக காலை 10 மணியளவில் பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →