முதியவா் சடலம் மீட்பு
திருப்பட்டினம் பகுதி போலகம் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருப்பட்டினம் பகுதி போலகம் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
போலகத்தில் உள்ள புதுச்சேரி மின்திறல் குழும நிறுவனம் (பிபிசிஎல்) அருகே முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதாக திருப்பட்டினம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.