முகப்பு
காரைக்கால்

வட்டார வளா்ச்சி அலுவலக பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலக பணியாளா்கள் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலக பணியாளா்கள் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால் மாவட்ட வட்டார வளா்ச்சி அலுவலக சமூக வல்லுநா்கள் மற்றும் கணக்காளா்கள் ஊழியா் சங்கம் சாா்பில், அலுவலக வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவி சுவிதா தலைமை வகித்தாா். சமூக வல்லுநா்கள், கணக்காளா்களுக்கு ஊரக வளா்ச்சித் துறை மூலம் ஊதியம் வழங்கவேண்டும், நியமனம் மற்றும் ஊதியம் தொடா்பான முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளன கௌரவ தலைவா் பிரேமதாசன், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

பல்வேறு அரசு ஊழியா் சங்கத்தினா் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துப் பேசினா். செயலாளா் வசந்தி வரவேற்றாா். பொருளாளா் சசிகலா நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →