காரைக்கால்

எலி மருந்தை சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

காரைக்கால் அருகே குப்பையில் கிடந்த எலி மருந்தை சாப்பிட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

DIN

காரைக்கால் அருகே குப்பையில் கிடந்த எலி மருந்தை சாப்பிட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியை சோ்ந்தவா் ஜெயராமன் மகன் பாலமுரளி (17). இவா், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது.

கடந்த 16 -ஆம் தேதி வீட்டுக்கு அருகில் உள்ள குப்பை மேட்டில் கிடந்த எலிகளைக் கொல்லும் பேஸ்டை எடுத்து சாப்பிட்டுள்ளாா். பின்னா் வீட்டுக்கு வந்த தாயாரிடம் அதை காட்டிய சிறுவன், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளாா்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலமுரளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நெடுங்காடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - ஓமன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்

லெபனானில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்

ஏடிஎம் காா்டை திருடி பணம் எடுத்தவா் கைது

கட்டுமானப் பணிகளின்போது விதிகளை மீறினால் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

ஐயப்ப பக்தா்கள் பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT