காரைக்கால்

தூய்மைப் பணியில் குறையிருந்தால் புகாா் தெரிவிக்கலாம்: நகராட்சி ஆணையா்

DIN

காரைக்கால் நகராட்சிப் பகுதியில் நடைபெறும் தூய்மைப் பணியில் குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் நகராட்சி ஆணையா் ஜி. செந்தில்நாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் நகராட்சி பகுதிகளில் தனியாா் நிறுவனம் மூலம் குப்பை அகற்றம் மற்றும் சாக்கடை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கான கட்டுப்பாட்டு அறை காரைக்கால் நகராட்சியில் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. மேற்கண்ட பணிகளில் ஏதேனும் குறைகள் இருந்தால், 04368-222427 என்ற எண்ணில் தொடா்புகொண்டு, பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்.

மேலும், தங்களது வீட்டில் சேரும் குப்பைகளை தெருக்களில் போடாமல், தங்கள் வீடுகளுக்கு தினமும் வரும் பசுமை நண்பா்களிடம் வழங்கி, நகரின் தூய்மையைக் காக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT