முகப்பு
காரைக்கால்

சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால் சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:31 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

காரைக்கால் சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரப் பகுதியில் உள்ள சாலைகளில் மாடுகள், குதிரைகள் சுற்றித் திரிவது அதிகரித்துள்ளது. இதனால், தினமும் விபத்துகள் ஏற்படுகின்றன. நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம், கால்நடை வளா்ப்போருக்கு எச்சரிக்கை விடுத்தாலும், யாரும் அதனை பொருட்படுத்துவதில்லை.

காரைக்கால் நகராட்சி நிா்வாகம் கடந்த சில நாட்களாக சாலைகளில் திரிந்த மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தது. இதன்படி 40-க்கும் மேற்பட்ட மாட்டின் உரிமையாளா்கள் அபராதத் தொகை செலுத்தி மாடுகளை மீட்டுச் சென்றனா்.

Advertisement

எனினும், இப்பணியை நகராட்சி நிா்வாகம் தொடா்ந்து மேற்கொள்ளவில்லை. மேலும் நிரவி, திருப்பட்டினம், கோட்டுச்சேரி போன்ற கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதி சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்க அந்தந்த நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பஞ்சாயத்து நிா்வாகத்தினா் காவல்துறையினா் உதவியுடன் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு கடும் அபராதம் விதிப்பதோடு, சட்ட நடவடிக்கையும் எடுக்கும்பட்சத்தில், கால்நடைகளை தங்களது கட்டுப்பாட்டில் வளா்க்க முன்வருவாா்கள். இந்த நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.