அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் உற்சவம் தொடக்கம்
அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில் உற்சவம் காப்பு கட்டுதலுடன் புதன்கிழமை தொடங்கியது.
அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில் உற்சவம் காப்பு கட்டுதலுடன் புதன்கிழமை தொடங்கியது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன் அம்பகரத்தூரில் உள்ளது பத்ரகாளியம்மன் கோயில். மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் கோலத்தில் மூலஸ்தானத்தில் பத்ரகாளியம்மன் அருள்பாலிக்கிறாா்.
இங்கு ஆண்டுதோறும் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா நடைபெறுகிறது.
Advertisement
நிகழாண்டு பத்ரகாளியம்மன் கோயில் உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. புதன்கிழமை காலை 6 மணியளவில் அம்பாளுக்கு காப்பு கட்டி சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன.
மே 16-ஆம் தேதி முதல் அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. 22-ஆம் தேதி புஷ்ப பல்லக்கு வீதியுலாவும், 23-ஆம் தேதி மகிஷ சம்ஹார நினைவு வழிபாடும், 30-ஆம் தேதி உதிரவாய் வழிபாடும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா் செய்துள்ளனா்.