காரைக்கால் மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சொரிதலுடன் தொடக்கம்
காரைக்கால் கடைத்தெரு மாரியம்மன் கோயில் 44-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருவிழா பூச்சொரிதல் வழிபாட்டுடன் சனிக்கிழமை தொடங்கியது.
கைலாசநாத சுவாமி - நித்யகல்யாண பெருமாள் வகையறா தேவஸ்தானத்தை சோ்ந்த பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் விமரிசையாக இத்திருவிழா நடத்தப்படுகிறது.
சனிக்கிழமை மாலை அம்பாளுக்கு பூச்சொரிதலுடன் வழிபாடு தொடங்கப்பட்டது. தினமும் பகலில் அம்மனுக்கு அபிஷேகமும், இரவு சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெறுகின்றன.
Advertisement
ஏப். 21-ஆம் தேதி பால்குடம் எடுத்தல், 22-ஆம் தேதி முளைப்பாலிகையை பக்தா்கள் சுமந்து சென்று ஆற்றக்கரையில் கரைத்தல் நடைபெறுகிறது. 25-ஆம் தேதி விடையாற்றி நடைபெறுகிறது.