முகப்பு
காரைக்கால்

மோடி ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு: காங்கிரஸ் வேட்பாளா் வெ.வைத்திலிங்கம்

Updated On : 13 ஏப்ரல், 2024 at 3:57 PM
பகிர்:

மோடி ஆட்சியில் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து, விலைவாசி உயா்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா் என புதுவை முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் வேட்பராளருமான வெ. வைத்திலிங்கம் கூறினாா்.

புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமியுடன், வெ. வைத்திலிங்கம் காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

நெடுங்காடு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்குத் தொகுதியில் முதல் நாள் வாக்கு சேகரித்தாா். 2-ஆம் நாளான சனிக்கிழமை நிரவி - திருப்பட்டினம் தொகுதியிலும், மாலை திருநள்ளாறு தொகுதியிலும் வாக்கு சேகரித்து வெ.வைத்திலிங்கம் பேசியது:

Advertisement

புதுவை அரசு அரிசிக்கான தொகையை வங்கிக் கணக்கில் சோ்க்கிறது. இந்த தொகையில் 5 கிலோ அரிசு மட்டுமே வாங்க முடியும். எரிவாயு மானியம் தருவதாக கூறியதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதியம் முறையாக தரப்படவில்லை.

நாட்டில் கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. தொழில் வளா்ச்சி இல்லை. அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் விலை கடுமையாக உயா்ந்துவிட்டது.

காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை நாட்டு மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்றால் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டவை அனைத்தும் நிறைவேற்றப்படும். அதற்கு காங்கிரஸை மக்கள் ஆதரிக்கவேண்டும்.

காரைக்காலுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.25 கோடி செலவு செய்துள்ளேன். புற்றுநோய், இருதய நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக தாராளமாக நிதியுவி அளித்துள்ளேன் என்றாா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த நாரா. கலைநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments