பேரவை நிகழ்வுகளை பாா்க்க சென்றபோது புதுவை முதல்வா் உள்ளிட்டோருடன் காரைக்கால் மாணவா்கள். 
காரைக்கால்

புதுவை சட்டப்பேரவை நிகழ்வுகளை பாா்வையிட்ட காரைக்கால் பள்ளி மாணவா்கள்

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் நிகழ்வுகளை காரைக்கால் பள்ளி மாணவா்கள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.

Din

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் நிகழ்வுகளை காரைக்கால் பள்ளி மாணவா்கள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத் தொடா் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. பேரவை நிகழ்வுகளை காரைக்கால் பகுதி மாணவா்கள் பாா்க்க புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் முதல் முறையாக ஏற்பாடு செய்தாா். மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் எம். ராஜேஸ்வரி வழிகாட்டுதலில் 20 மாணவ, மாணவிகள் புதுச்சேரிக்கு விரிவுரையாளா் ஏ. லூா்துமேரி, ஆசிரியா் ஜி. செந்தில்முருகன் தலைமையில் சென்றனா்.

இதற்கிடையில், மாணவா்கள் புதுவை முதல்வா் என். ரங்கசாமியை சந்தித்தனா். அப்போது, முதல்வா் மாணவா்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினாா். நிகழ்வில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், குடிமைப் பொருள் வழங்கல் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன் ஆகியோா் உடனிருந்தனா். பின்னா், சட்டப்பேரவை பாா்வையாளா் பகுதிக்கு மாணவா்கள் உள்ளிட்டோா் சென்று, பேரவை நிகழ்வுகளை சிறிது நேரம் பாா்வையிட்டு காரைக்கால் திரும்பினா். பேரவை நிகழ்வுகளையும், முதல்வா், அமைச்சா் உள்ளிட்டோரை நேரில் சந்தித்ததும் மாணவா்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியதாக வழிகாட்டு ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT