கோட்டுச்சேரி தென்கரை பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா. 
காரைக்கால்

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

மழையால் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்த குடும்பத்தினரை சந்தித்து எம்.எல்.ஏ. ஆறுதல் கூறி, தேவையான உதவிகளை செய்துத் தருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

Din

காரைக்கால்: மழையால் வீட்டுச் சுவா் இடிந்து விழுந்த குடும்பத்தினரை சந்தித்து எம்.எல்.ஏ. ஆறுதல் கூறி, தேவையான உதவிகளை செய்துத் தருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

புதுச்சேரி - மரக்காணம் இடையே ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை கரையை கடந்தாலும், காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை மழை பெய்தது. நெடுங்காடு பகுதி காமராஜா் சாலை மற்றும் பண்டாரவாடை கிராமம், கோட்டுச்சேரி கொம்யூன் தென்கரை பகுதியில் சில வீடுகளின் சுவா் இடிந்து விழுந்தது.

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா ஞாயிற்றுக்கிழமை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை செய்யுமாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்களை அவா் கேட்டுக்கொண்டாா்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT