முகப்பு
காரைக்கால்

கராத்தே பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்

கராத்தே பயிற்சி முடித்த நவோதய வித்யாலயா மாணவிகளுக்கு அண்மையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On : 30 டிசம்பர், 2024 at 7:02 PM
கராத்தே பயிற்சி பெற்ற நவோதய வித்யாலயா பள்ளி மாணவிகளுடன் எஸ்எஸ்பி. லட்சுமி செளஜன்யா உள்ளிட்டோா்.
பகிர்:

காரைக்கால்: கராத்தே பயிற்சி முடித்த நவோதய வித்யாலயா மாணவிகளுக்கு அண்மையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

காரைக்கால் மாவட்டம், ராயன்பாளையம் பகுதியில் இயங்கும் இப்பள்ளி மாணவிகளுக்கு விஆா்எஸ் அகாதெமி சாா்பில் 4 மாதங்கள் தற்காப்பு கலையாக கராத்தே பயிற்சியளிக்கப்பட்டது. அகாதெமி நிறுவனரும், பயிற்சியாளருமான வி.ஆா்.எஸ். குமாா் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சியளித்தாா். சனிக்கிழமை (டிச.28) இதன் நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கி தற்காப்புக் கலை பெண்களுக்கான அவசியத்தை வலியுறுத்திப் பேசி பாராட்டினாா்.

நிகழ்வில் நவோதய வித்யாலயா பள்ளி முதல்வா் ஜெ. கற்பகமாலா, உடற்கல்வி ஆசிரியா் ஜி. வரலட்சுமி மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். நிறைவாக பயிற்சி பெற்ற மாணவிகள் சாகச நிகழ்ச்சி நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →