காரைக்கால்: அங்கன்வாடி மையத்துக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், திருவேட்டக்குடியில் பழைமையான நூலகக் கட்டடத்தில், அந்த பகுதிக்கான அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
இந்த கட்டடத்தில், மின்சாரம் மற்றும் குடிநீா் வசதி இல்லை என கூறப்படுகிறது. இதனால் இம்மையத்தில் பயிலக்கூடிய குழந்தைகள் மற்றும் மைய பொறுப்பாளா்கள் சிரமப்படுவதாக அந்த பகுதியினா் தெரிவிக்கின்றனா்.
சம்பந்தப்பட்ட அரசு நிா்வாகத்தினா், கட்டடத்தை பாா்வையிட்டு, குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படை வசதியை செய்துத்தரவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.