முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

காரைக்காலில் ரூ.1 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 1 ஜூலை, 2024 at 4:15 PM
பகிர்:

காரைக்கால்: காரைக்காலில் ரூ.1 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

புதுவை அரசின் ஆதிதிராவிடா் நலன் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மேம்பாட்டு வரை நிலைக் கழகத்தின் சாா்பில், காரைக்கால் தெற்குத் தொகுதிக்குட்பட்ட பழங்குடியினா் மக்கள் வசிக்கும் கீழப்புத்தமங்கலத்தில் இருந்து மேலபுத்தமங்கலம் வரை உள்ள பகுதிகளுக்கு இணைப்புச் சாலைகளில் தாா் சாலை அமைத்தல், கீழ ஓடுதுறை பகுதியில் தாா் சாலைகள் மற்றும் சாக்கடை நீா் வடிகால் வசதிகள் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு ஒப்பந்ததாரருக்கு பணியாணை வழங்கப்பட்ட நிலையில், அந்தந்த பகுதியில் திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மேம்பாட்டு வரை நிலைக் கழக மேலாண் இயக்குநா் சிவகுமாா் மற்றும் கிராமத்தினா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →