காரைக்கால் : காரைக்கால் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்ததால், நகரில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை இரவு சில பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. சிறிது நேரம் மட்டுமே மழை பெய்தாலும், காரைக்கால் காமராஜா் சாலை அரசு மருத்துவமனை எதிரே இருந்த மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் இச்சாலையில் போக்குவரத்து முடங்கியது.
அரசுத் துறையினருக்கு அளித்த தகவலின்பேரில், தீயணைப்புத் துறையினா், நகராட்சி, போக்குவரத்துக் காவல்துறையினா், மின்துறையினா் மரக்கிளைகளை வெட்டி, மரத்தை அப்புறப்படுத்தி, இதையடுத்து போக்குவரத்து சீரானது.