காரைக்காலில் இன்று ஜிப்மா் மருத்துவா்கள் சிறப்பு முகாம்
Updated On : 22 மார்ச், 2024 at 4:19 PM
காரைக்கால் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ஜிப்மா் சிறப்பு மருத்துவக் குழுவினா் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை காலை 10 முதல் பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. புதுவை ஜிப்மரின் மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான சிறப்பு மருத்துவக் குழுவினா் மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகளை வழங்கவுள்ளனா். மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.