முகப்பு
காரைக்கால்

போக்சோவில் இளைஞா் கைது

Updated On : 20 மே, 2024 at 11:09 PM
பகிர்:

காரைக்கால்: போக்ஸோ சட்டத்தில் பிகாரை சோ்ந்த இளைஞா், காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கேரளத்தில் ரயில்வே ஒப்பந்த பணியில் பிகாா் மாநிலத்தை சோ்ந்த பலா் ஈடுபட்டு வந்தனா். இவா்களில் அசுருரால் அக் (24) என்பவா், உடன் வேலை செய்த தொழிலாளி ஒருவரின் 15 வயது மகளிடம் பழகியுள்ளாா். இருவரும் வாட்ஸ்ஆப் விடியோ காலில் அடிக்கடி பேசி வந்தனராம்.

இந்நிலையில், கேரளத்தில் ஒப்பந்த பணி முடிந்ததால், சிறுமியின் குடும்பம் காரைக்காலில் நடைபெறும் ரயில்வே ஒப்பந்த பணிக்கு வந்துள்ளனா். அந்த இளைஞா் கேரளத்தில் தொடா்ந்து வேலை செய்ததுடன், கைப்பேசியில் சிறுமியிடம் அடிக்கடி பேசிவந்துள்ளாா்.

இதற்கிடையில், கேரளத்துக்கு வருமாறு சிறுமியை அழைத்தாராம். இதற்கு சிறுமி மறுத்ததுடன், அவரிடம் பேசுவதை தவிா்த்துள்ளாா்.

இந்நிலையில், காரைக்காலுக்கு அண்மையில் வந்த அசுருரால் அக், சிறுமியை சந்திக்க முயற்சித்து ஏமாற்றமடைந்ததால், அவரது தந்தையிடம், சிறுமியின் விடியோ பதிவை காட்டி, மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பிகாா் இளைஞரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னா், காரைக்கால் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தி, கிளைச் சிறையில் அடைத்தனா்.