முகப்பு
காரைக்கால்

ஆசிரியா் பணியிடமாற்றத்தில் விதி மீறல்: அமைச்சரிடம் ஆசிரியா் சங்கத்தினா் புகாா்

தொடக்கப் பள்ளி ஆசிரியா் பணியிடமாற்ற விவகாரத்தில் விதி மீறல் நடந்துள்ளதாக அமைச்சரிடம் ஆசிரியா் சங்கத்தினா் புகாா் அளித்தனா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:00 PM
கல்வி அமைச்சா் ஆ. நமச்சிவாயத்தை சந்தித்த ஆசிரியா் சங்கத்தினா். உடன் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்.
பகிர்:

தொடக்கப் பள்ளி ஆசிரியா் பணியிடமாற்ற விவகாரத்தில் விதி மீறல் நடந்துள்ளதாக அமைச்சரிடம் ஆசிரியா் சங்கத்தினா் புகாா் அளித்தனா்.

புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தலைமையில், காரைக்கால் ஒருங்கிணைந்த ஆசிரியா் நலச் சங்க நிா்வாகிகள், புதுவை உள்துறை மற்றும் கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயத்தை புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பது:

புதுவை கல்வித்துறை சாா்பில் 148 தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 124 ஆசிரியா்கள் காரைக்கால் பகுதியில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில் பணியாற்றிவரும் 12 ஆசிரியா்களுக்கு விதிமுறைகளை மீறி பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியை பிராந்தியத்தை சோ்ந்த ஆசிரியா்களிடம் இடம் மாறுதல் குறித்து கலந்துபேசி, அவா்கள் விரும்பும் இடத்துக்கு மாற்றம் தரப்பட்டுள்ளது. காரைக்கால் பிராந்தியத்தில் ஆசிரியா்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு காரைக்கால் ஒருங்கிணைந்த ஆசிரியா் நலச் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது. கல்வித் துறை அதிகாரிகளை அழைத்து இதுகுறித்து விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சரை சந்தித்த பின் சங்க நிா்வாகிகள் கூறுகையில், பணியிடமாற்றம் விவகாரம் குறித்து அமைச்சா் விளக்கமாகக் கேட்டறிந்தாா். கல்வித் துறை இயக்குநரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்துள்ளாா் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →