அரசின் திட்ட நிதியுதவியில் கடன் தொகை பிடித்தம் கூடாது: எம்.எல்.ஏ.வேண்டுகோள்
அரசின் திட்ட நிதியுதவியில் கடன் தொகை பிடித்தம் செய்யும் போக்கை வங்கிகள் கைவிட உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என புதுவை முதல்வரிடம் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
அரசின் திட்ட நிதியுதவியில் கடன் தொகை பிடித்தம் செய்யும் போக்கை வங்கிகள் கைவிட உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என புதுவை முதல்வரிடம் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
புதுவை முதல்வா் என். ரங்கசாமியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இதுகுறித்து அவா் கூறியது :
புதுவை அரசு பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் பயனாளிகளுக்கான நிவாரணத் தொகை அல்லது அரிசிக்கான தொகையை அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்துகிறது. இந்த திட்டங்கள் மட்டுமல்லாது முதியோா் உதவித் தொகை, விதவைப் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான திட்ட நிதி, குடும்பத் தலைவிகளுக்கான மகளிா் உரிமைத் தொகை போன்றவையும் வங்கிகளின் மூலம் பயனாளிகள் பெறுகின்றனா்.
சில வங்கிகள் ஏற்கெனவே பயனாளிகள் பெற்ற வங்கிக் கடனுக்காக அதை பிடித்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதனால் அரசின் திட்ட உதவிகள் கிடைக்காமல் ஏழைகள் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, இந்த விவகாரத்தில் முதல்வா் தலையிட்டு, திட்ட உதவித் தொகையை கடனுக்காக பிடித்தம் செய்யப்படுவதை தவிா்க்க அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. வங்கியாளா்களை அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதியளித்தாா் என்றாா்.