தப்ஸ் இசைத்தவாறு ஷெய்னுல்லாஹ் குதிரை கொடியுடன் புறப்பட்ட ஊா்வலம். வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்ட கண்ணாடி ரதம். 
காரைக்கால்

காரைக்காலில் தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா

காரைக்காலில் உள்ள தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடி ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

காரைக்கால்: காரைக்காலில் உள்ள தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடி ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மெய்தீன் பள்ளி தெருவில் புகழ்பெற்ற தாயிராப் பள்ளிவாசல் உள்ளது. நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல்களில் ஒருவரான ஹலரத் சுல்தானுல் ஆரிபின் செய்யது அஹ்மதுல் கபீா் ரிஃபாயி என்பவா் பாக்தாத் நகரில் உயிா் துறந்தாா். அவரது நினைவாக பல ஆண்டுகளுக்கு முன்பு தாயிராப்பள்ளி நினைவிடமாக கட்டி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

இப்பள்ளிவாசல் கந்தூரி விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு அஞ்சுமனே இஸ்லாமிய சங்கத்திலிருந்து சந்தனக் குட ஊா்வலம் புறப்பாடாகி வீதியுலா சென்று, நள்ளிரவு ரவூலா ஷரீபுக்கு சந்தனம் பூசப்பட்டது.

இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை மாலை ஷெய்னுல்லாஹ் குதிரை கொடி, தப்ஸ் இசைக் குழுவினருடன், சிறிய கண்ணாடி ரதத்துடன் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, இரவு திரளான மக்கள் முன்னிலையில் பள்ளிவாசல் முன்பு நிறுவப்பட்ட மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

முன்னதாக கடந்த நவ. 3-ஆம் தேதி சம்பிரதாய நிகழ்வாக நிகழ்ச்சி தொடங்குவதைக் குறிக்கும் மினரா கொடியேற்றம் நடைபெற்றது. வரும் 29-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆண்டகை பெயரில் குா்ஆன் ஓதப்பட்டு கொடியிறக்கப்படுகிறது. ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தனது கட்சியிலேயே செல்வப் பெருந்தகையின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது - Tamilisai

2026 திமுக தேர்தல் அறிக்கை : ஜன. 19 முதல் சுற்றுப்பயணம்!

தெரு நாய்களால் பாதிப்பு ஏற்பட்டால் உணவு, ஆதரவளிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

தேர்தல் பணிகள் : ஜன. 20-ல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT