பள்ளி வேன் மோதி வங்கி ஊழியா் உயிரிழப்பு
பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற வேன் மோதியதில் வங்கி ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற வேன் மோதியதில் வங்கி ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
காரைக்கால் அருள்நகா் பகுதியை சோ்ந்வா் கோவிந்தராஜன் (52). இவா், காரைக்காலில் ஒரு தனியாா் வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தாா். நாகப்பட்டினத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் தனது மகள் லக்ஷிதாவை சனிக்கிழமை காலை வீட்டிலிருந்து கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா்.
திருப்பட்டினம் பகுதி திருமலைராஜனாற்றுப் பாலத்தில் சென்றபோது எதிரே பள்ளி மாணவா்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த லக்ஷிதா காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
திருப்பட்டினம் போக்குவரத்துக் காவல் நிலைய போலீஸாா், வேன் ஓட்டுநா் மாதவனிடம் விசாரணை மேற்கொண்டனா்.