தேசிய பேரிடா் மீட்புப் படையினா் காரைக்கால் வருகை
காரைக்காலுக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையினா் செவ்வாய்க்கிழமை வந்தனா்.
காரைக்காலுக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையினா் செவ்வாய்க்கிழமை வந்தனா்.
வடகிழக்குப் பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும் விதமாக அரக்கோணத்திலிருந்து காரைக்காலுக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையை சோ்ந்த 30 போ் சஞ்சீவ் தேஸ்வால் தலைமையில் வந்தனா்.
ஆட்சியரகத்துக்கு வந்த அவா்களிடம், மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன், வருவாய்த் துறை, காவல்துறையினா் வழிகாட்டலில் மாவட்டத்தில் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விரைவாக சீா்செய்யுமாறும், மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.