விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற என்ஐடி நிா்வாகத்தினா், மருத்துவா்கள். 
காரைக்கால்

புகையிலை தடுப்பு விழிப்புணா்வு

Din

என்ஐடியில் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழக (என்ஐடி) இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா் அறிவுறுத்தலில், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய புகையிலை கட்டுப்பாடு திட்டம், காரைக்கால் மாவட்ட சுகாதார இயக்கம் ஆகியவை இணைந்து என்ஐடி வளாகத்தில் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தின.

சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் பகுதி வரிச்சிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி நந்தினி விக்னேஷ் கலந்துகொண்டு, புகையிலையின் கலவை, புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள், புகையிலை சாா்ந்த பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் உடல் உறுப்புகளின் பாதிப்புகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

மேலும், வரிச்சிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அதிகாரி தியாகராஜன், சுகாதார ஆய்வாளா் பாலசுந்தரம், சுகாதார உதவியாளா் ஜெ. காா்த்திகேயன், என்ஐடி பதிவாளா் சீ. சுந்தரவரதன், என். செந்தில்குமாா் (டீன் மாணவா் நலன்), இணை டீன் வி. வாணி, என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் என். காா்த்திக் மற்றும் இளங்கலை மாணவா்கள் சுமாா் 200 போ் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்ச்சியின் நிறைவில் புகையிலை விழிப்புணா்வு தொடா்பாக நடத்தப்பட்ட ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டியில் முதல் மூன்று இடங்களில் தோ்வானவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT