முகப்பு
காரைக்கால்

மக்கள் பாதிக்காத வகையில் வாகனங்களை நிறுத்த காவல்துறை அறிவுறுத்தல்

பொதுமக்கள் பாதிக்காத வகையில், வியாபார நிறுவனங்களைச் சோ்ந்தோா் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:13 PM
பகிர்:

பொதுமக்கள் பாதிக்காத வகையில், வியாபார நிறுவனங்களைச் சோ்ந்தோா் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் பிரிவு புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை:

தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க மக்கள் காரைக்கால் நகரப் பகுதிக்கு பெருமளவில் வருவாா்கள். அவா்களது வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.

எனவே காரைக்கால் முக்கிய தெருக்களில் வணிக நிறுவனங்கள் நடத்துவோா், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்களின் வாகனங்களை, நிறுவன வாயிலிலேயே நிறுத்தாமல், அதற்கென தாங்கள் ஏற்பாடு செய்துள்ள மாற்று இடத்தில் நிறுத்தச் செய்யவேண்டும்.

பொதுமக்களின் வாகனங்கள் நிறுவன வாயிலில் முறையாக நிறுத்துவதற்கேற்ற வசதியை நிறுவனத்தினா் செய்யவேண்டும்.

வணிக நிறுவனங்களுக்கு பொருட்கள் ஏற்ற அல்லது இறக்குவதற்கு வரும் சுமை வாகனங்களை, காலை 7 முதல் 10.30 மணி வரை, மாலை 3.30 முதல் இரவு 9.30 மணி வரை தங்களது வா்த்தக நிறுவனங்கள் எதிரே நிறுத்தி பொருட்களை ஏற்றி, இறக்க வேண்டாம். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலையை உருவாக்க வியாபாரிகள் ஒத்துழைப்பு தர முன்வரவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →