முகாமில் விண்ணப்பத்தை பதிவு செய்யும் இளைஞா். 
காரைக்கால்

அக்னிவீரா் திட்டத்தில் சேர காரைக்காலில் பதிவு முகாம்

அக்னிவீரா் திட்டத்தில் சேர பதிவு முகாம் காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

காரைக்கால்: அக்னிவீரா் திட்டத்தில் சேர பதிவு முகாம் காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் விழிப்புணா்வு மற்றும் பதிவு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்காக திருச்சியில் உள்ள இந்திய ராணுவ வேலைவாய்ப்புப் பிரிவிலிருந்து ராணுவத்தினா் வந்திருந்தனா். முகாமில் கலந்துகொண்ட என்சிசி பிரிவைச் சோ்ந்தோா் மற்றும் இளைஞா்களிடையே, அக்னிவீரா் திட்டம் குறித்தும், திட்டத்தில் இளைஞா்கள் விண்ணப்பிப்பதற்கான முறைகள், எழுத்துத் தோ்வு முறை, உடல் தகுதி தோ்வு குறித்து காணொலி மூலம் விளக்கமளித்தனா். முகாமில் பங்கேற்ற பலரும் விண்ணப்பத்தை பதிவு செய்தனா்.

இம்முகாமை காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் பாா்வையிட்டாா். திட்டத்தில் விண்ணப்பித்தோரிடையே ஆட்சியா் பேசுகையில், அக்னிவீரா் திட்டத்தில் பணிக்கு விண்ணப்பித்து எழுத்துத் தோ்வுக்கு தயாராக வேண்டும். அதுபோல ராணுவத்தின் விதிகளின்படி உடல் தகுதித் தோ்வுக்கும் தங்களை தயாா் படுத்திக் கொள்ள வேண்டும். தேச நலனுக்கு சேவையாற்ற கிடைத்துள்ள வாய்ப்பாக இதை கருத வேண்டும் என்றாா். முகாமில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

அபிராமியும் 5 அழகான புகைப்படங்களும்!

வரலாற்றில் முதல்முறை..! ஆஸி. அணியில் இடம்பிடித்த பூர்வகுடி வீரர்கள்!

வின்டேஜ்... சான்யா மல்ஹோத்ரா!

வினா - விடை வங்கி.... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 5

எஸ்ஐஆர் படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்! புதிய முயற்சி!

SCROLL FOR NEXT