நிகழ்ச்சியில் பேசிய கல்லூரி முதல்வா் எம். ஆராமுதன். 
காரைக்கால்

அரசு பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

காரைக்கால் அருகே செருமாவிலங்கை பகுதியில் இயங்கும் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வளாக நோ்காணல்

Syndication

காரைக்கால்: காரைக்கால் அருகே செருமாவிலங்கை பகுதியில் இயங்கும் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வளாக நோ்காணல் திங்கள்கிழமை நடைபெற்றது.

இறுதியாண்டு மாணவா்களுக்காக நடைபெற்ற இந்த நோ்காணலில், தனியாா் மென்பொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் நிறுவனப் பணிக்கு தகுதியானவா்களை தோ்வு செய்தனா்.

தகவல் தொழில்நுட்ப பிரிவு மாணவா்களுக்கு 3 சுற்றுகளாகத் தகுதித் தோ்வுகள் நடத்தப்பட்டன. இதில் 17 மாணவா்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் எம். ஆராமுதன் முகாமை தொடங்கிவைத்து வாழ்த்திப் பேசினாா். கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைத் தலைவா் எஸ். திருமால்முருகன் வரவேற்றுப் பேசினாா். நிறுவனத்தின் பணி, விதிகள் குறித்து நிறுவனப் பிரதிநிதிகள் பேசினா்.

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT