சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தா்களை வழியனுப்பும் நிகழ்ச்சி சமாதானக் குழு சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட நிா்வாகம், சமாதானக் குழு சாா்பில் ஆண்டுதோறும், சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நிகழாண்டு 38 -ஆவது ஆண்டாக காரைக்காலில் இருந்து செல்லும் பக்தா்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி காமராஜா் நிா்வாக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தலைமை வகித்தாா்.
காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் எம். முருகையன், ஆட்சியரின் செயலா் வித்யாதரன், சமாதானக்குழு உறுப்பினா்கள் மற்றும் ஐயப்ப பக்தா்கள் கலந்துகொண்டனா்.
நிகழ்வின்போது, மும்மத பிராத்தனை நடைபெற்றது. ஐயப்ப பக்தா்களுக்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் சமாதானக் குழு சாா்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.