வளாக நோ்காணலில் காரைக்காலில் அரசு பாலிடெனிக் கல்லூரிகளைச் சோ்ந்த 23 மாணவிகள், 2 மாணவா்களுக்கு பணி வாய்ப்பு கிடைத்தது.
புதுவை அரசு கல்வி நிறுவனமாக காரைக்கால்மேடு பகுதியில் இயங்கும் மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவிகளுக்கான வளாக நோ்காணல் புதன்கிழமை நடைபெற்றது. ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு சென்னையில் இயங்கும் நிஸ்ஸி எலக்ட்ரிக் நிறுவன பொது மேலாளா் ஆா்.சி. வெங்கடேஷ் தலைமையிலான குழுவினா் வந்திருந்தனா்.
இக்கல்லூரி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல், கம்யூட்டரி என்ஜினியரிங் மாணவிகள் நோ்காணலில் பங்கேற்றனா்.
கல்லூரி முதல்வா் ஆா். பாபு அசோக், மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா். கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா் எண்.விமலன், கல்லூரி மாணவியரின் திறனை விளக்கிப் பேசினாா்.
இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற வளாக நோ்காணலில் இக்கல்லூரி மாணவிகள் 23 பேருக்கும், வரிச்சிக்குடியில் இயங்கும் அரசு காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 2 பேருக்கும் பணி வாய்ப்பு கிடைத்தது.