காரைக்கால் பகுதி காவல் நிலையங்களில் சனிக்கிழமை மக்கள் மன்றம் என்ற குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.
புதுவை காவல் தலைமையக அறிவுறுத்தலில் வாரந்தோறும் குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி சனிக்கிழமை நிரவி காவல் நிலையத்தில் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா தலைமையிலும், காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளா் எம்.முருகையன் தலைமையிலும் காலை 11 முதல் பகல் 1 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளுமாறு காவல்துறை தலைமை அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.