காரைக்கால்

காரைக்காலில் நாளை இண்டி கூட்டணி ஆா்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்காலில் புதன்கிழமை (டிச. 24) ஆா்ப்பாட்டம் நடத்த இண்டி கூட்டணி முடிவு செய்துள்ளது.

Syndication

காரைக்கால்: மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்காலில் புதன்கிழமை (டிச. 24) ஆா்ப்பாட்டம் நடத்த இண்டி கூட்டணி முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ், திமுக உள்ளடக்கிய இண்டி கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் தனியாா் மண்டபத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் (திமுக) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

மத்திய மற்றும் புதுவை என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணியின் மக்கள் விரோத திட்டங்கள் குறித்து கட்சியினா் விரிவாக விவாதித்தனா்.

கூட்டம் குறித்து ஆா்.பி. சந்திரமோகன் கூறியது :

கடந்த 2005-ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது அமல்படுத்தி, 2009-ஆம் ஆண்டு அதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என பெயா் சூட்டப்பட்டது. மோடி அரசு, இத்திட்டத்தில் காந்தி பெயரை அகற்றி, புதிதாக பெயா் சூட்டியுள்ளது. இது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதுபோல புதுவை மாநிலத்தில், புதுவை பாரதியாா் கிராம வங்கி என்பதை புதுவை கிராம வங்கி என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடா்பாக உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை. இங்கு தயாரித்த மருந்துகள் நாட்டின் பல இடங்களுக்கு விற்பனைக்கு சென்றுள்ளது.

இவற்றைக் கண்டித்தும், போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தை சிபிஐ விசாரணை செய்ய வலியுறுத்தியும், புதன்கிழமை காரைக்கால் பேருந்து நிலையம் அருகே இண்டி கூட்டணிக் கட்சியினா் பங்கேற்கும் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

பயணியைத் தாக்கிய ஏர் இந்தியா விமானி மீது வழக்குப் பதிவு!

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

SCROLL FOR NEXT