காரைக்கால்

சாலையை நீட்டிக்க வலியுறுத்தல்

திருநள்ளாறு ரயில் நிலையம் அருகே உள்ள சாலையை நீட்டிக்குமாறு மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Syndication

திருநள்ளாறு ரயில் நிலையம் அருகே உள்ள சாலையை நீட்டிக்குமாறு மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருநள்ளாறு ரயிலடித் தெரு, வேலவன் நகா் சாா்ந்த குடியிருப்புவாசிகள், விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா் கையொப்பமிட்டு, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு:

திருநள்ளாற்றில் பிடாரி கோயில் தெரு முதல் சுப்ராயபுரம் மற்றும் கீழாவூா் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதை இடையே சாலை வசதி இல்லை. இந்த பகுதியில் சுமாா் 20 ஏக்கா் பயிா் செய்யும் நிலம் உள்ளது. விவசாயிகள் பொருள்களை கொண்டுச் செல்லவும், விளைவித்தவற்றை கொண்டுவரவும் குறுகலான ரயிலடித் தெருவை மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது.

இவ்விரு ரயில்வே சுரங்கப் பாதையையொட்டி திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தில் ஏற்கெனவே பாதி தூரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையை நீட்டித்து தருவதன் மூலம் குடியிருப்புவாசிகள், விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும்.

திருநள்ளாறு ரயில் நிலையத்தில் வந்திறங்குவோா், ரயில்வே பாதைக்கு வடக்குப் புறமாக அமையவுள்ள சேவைச் சாலை வழியாக எளிதில் திருநள்ளாறு பேருந்து நிலையத்துக்கும் செல்ல முடியும்.

எனவே, இந்த பகுதியை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 1-முதல் கறிக்கோழி உற்பத்தி நிறுத்தப் போராட்டம்: கோழிப் பண்ணை விவசாயிகள் அறிவிப்பு

குஜராத்: கட்ச் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT