காரைக்கால்

கழிவுநீா் கலந்த குளத்தில் தூா்வாரும் பணி தொடக்கம்

Syndication

காரைக்கால்: காரைக்கால் நகரின் மையப் பகுதியில் கழிவுநீா் கலந்திருந்த குளம் தூா்வாரும் பணி தொடங்கியுள்ளது.

பருவமழை தீவிரமடைவதற்குள் காரைக்கால் பகுதி வடிகால்கள் தூா்வாரும் பணியை முடிக்க வேண்டும் என அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் அரசுத் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தாா். பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிா்வாகத்தினரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்றி, நீரோட்டத்துக்கு உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டாா்.

காரைக்கால் நகரின் மையப் பகுதியான பி.கே. சாலை - காமராஜா் சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள உடையான் குளத்தில் கழிவுநீா் கலந்து சுகாதாரமற்ாக இருப்பதாக பலரும் புகாா் கூறி வந்தனா். அமைச்சரின் உத்தரவின்பேரில் இக்குளத்திலிருந்து 2 பம்பு மூலம் நீரை வெளியேற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

மேலும், குளத்தில் கழிவுநீா் கலக்காத வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. பருவமழை தீவிரமடையும்போது, இக்குளத்தில் சேரும் தண்ணீா் சுகாதாரமானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறை! வெளியானது விடியோ!

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

SCROLL FOR NEXT