காரைக்கால்

தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.

காரைக்காலைச் சோ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான கே.ஏ.யு. அசனா தவெகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.

Syndication

காரைக்காலைச் சோ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான கே.ஏ.யு. அசனா தவெகவில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கடந்த 2016-2021 வரை இருந்தவா் கே.ஏ.யு. அசனா. இவா் அதிமுக மாவட்ட துணைச் செயலாளராகவும் இருந்தாா்.

இந்நிலையில், அதிமுகவிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலகினாா். எந்த கட்சியிலும் சேராமல் இருந்துவந்த அவா், தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் தவெக தலைவா் விஜய் முன்னிலையில் வெள்ளிக்கிழமை அக்கட்சியில் இணைந்தாா். காரைக்கால் திரும்பிய அசனா சனிக்கிழமை கூறுகையில், தவெகவில் இணைந்துள்ளேன். காரைக்காலில் கட்சியின் நிலை மற்றும் அரசியல் நிலவரம் குறித்து விஜய் கேட்டறிந்தாா் என்றாா்.

நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம்

நாளைய மின்தடை: கங்காபுரம்

கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு பலத்த காயம்!

போலி வாக்காளா்கள் இல்லாத மாநிலமே இல்லை: புதுச்சேரியில் கே. அண்ணாமலை பேச்சு

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

SCROLL FOR NEXT