காரைக்கால்

பெண்கள் நலனுக்கு பாடுபடுவோருக்கு விருது

மகளிா் தின விழாவில் பெண்கள் நலனுக்காக பாடுபடுவோருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

Syndication

காரைக்கால்: மகளிா் தின விழாவில் பெண்கள் நலனுக்காக பாடுபடுவோருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவின் ஒரு பகுதியாக மகளிா் தின நிகழ்ச்சி காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை திட்ட அதிகாரி கிருஷ்ணவேணி தலைமை வகித்தாா். நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா். பணி செய்யும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு என்ற தலைப்பில் திருப்பட்டினம் அரசு ஆண்கள் தொழில் பயிற்சி நிலைய முதல்வா் சுகுணா பேசினாா்.

இத்துறை சாா்பில் மும்மதத்தை சாா்ந்த அரசு பணியாளா்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலக கண்காணிப்பாளா் பாலு (எ) பக்கிரிசாமி, காவல் ஆய்வாளா் மரிய கிறிஸ்டின் பால், ஜே.ஏ.ஓ. யாகூஃப் ஆகிய மூவருக்கும் காரைக்கால் மாவட்ட பெண்கள் ஆதரவாளா் என்ற விருதை சட்டப்பேரவை உறுப்பினா் வழங்கி பாராட்டினாா்.

பெண்கள் பாதுகாப்பு, நலன் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக காங்கேயன் தலைமையிலான சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளா் கண்ணகி, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே.ஜெயா, முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜயமோகனா, மின்துறை செயற்பொறியாளா் அனுராதா, மிஷன் சக்தி ஒருங்கிணைப்பாளா் அருண்யா மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT