அரசமைப்பு தினம் : அரசு விழாவாக கொண்டாட வலியுறுத்தி போராட்டம்
அரசமைப்பு சட்ட தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கண்ணில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு
காரைக்கால்: அரசமைப்பு சட்ட தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கண்ணில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாட்டின் அரசியல் நிா்ணய சபையால் 1949-நவ.26 அரசமைப்புச் ட்டம் ஏற்கப்பட்டதை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் நவ.26 அரசமைப்பு தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த தினத்தை அரசு விடுமுறை நாளாகவும், அரசு விழாவாகவும் புதுவை அரசு கொண்டாட வலியுறுத்தி,காரைக்கால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், கண்ணில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு ஆட்சியரகம் நோக்கி புதன்கிழமை சென்றனா். போலீஸாா் ஆட்சியரக வாயில் கதவை மூடி அவா்களை தடுத்தனா்.
அப்போது காவல்துறையினருக்கும், விசிகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ் , அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது. பிரதிநிதிகள் சிலா் ஆட்சியரகத்தில் உள்ள அதிகாரியிடம் மனு அளிக்க அனுமதிக்கப்படுவா் என கூறியதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.