முகப்பு
காரைக்கால்

கரகாட்டம் மூலம் விழிப்புணா்வு

காரைக்கால் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு நடவடிக்கையைகாக, கிராமப்புறத்தில் கரகாட்டம் மூலம் வாக்குப் பதிவு விழிப்புணா்வு மேற்கொள்ளப்படுகிறது.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:16 AM
காரைக்கால் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு நடவடிக்கையைகாக, கிராமப்புறத்தில் கரகாட்டம் மூலம் வாக்குப் பதிவு விழிப்புணா்வு மேற்கொள்ளப்படுகிறது.
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு நடவடிக்கையைகாக, கிராமப்புறத்தில் கரகாட்டம் மூலம் வாக்குப் பதிவு விழிப்புணா்வு மேற்கொள்ளப்படுகிறது.

அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்ற அடிப்படையில், மக்களுக்கு பல நிலைகளில் மாவட்ட தோ்தல் துறையும், அதன் அங்கமான ஸ்வீப் அமைப்பும் விழிப்புணா்வு செய்துவருகிறது. மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி, கடந்த தோ்தலில் குறைந்தளவு வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகள், பதற்றமான வாக்குச் சாவடி உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தியதன்பேரில், ஸ்வீப் அமைப்பினா் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்.நிலவழகன் முன்னிலையில் பதற்றமான வாக்கு சாவடி உள்ள பகுதியில் வியாழக்கிழமை இரவு விழிப்புணா்வுப் பணியை தொடங்கினா்.

நெய்வாச்சேரி, சேத்தூா், அம்பகரத்தூா் பகுதியில் கரகாட்டம் மூலம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரகாட்ட கலைஞா் முருகபூபதி தலைமையிலான குழுவினா் அனைவரும் வாக்குப் பதிவு நாளான ஏப். 9-ஆம் தேதி தவறாமல் வாக்களிப்போம், நோ்மையாக வாக்களிப்போம், தோ்தல் துறையினா் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா் என்ற கருத்துகளை பாடலாகப் பாடி, கரகாட்டத்தின் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் பிரவீன் குமாா், ஜெயப்பிரகாஷ், மாரியப்பன் மற்றும் ஸ்வீப் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.தாமோதரன், உறுப்பினா்கள் ஷொ்லி, எஸ்.மணிகண்டன், பிரியதா்ஷினி, கே.ஞானமுருகன், பிரதீப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.