முகப்பு
காரைக்கால்

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

காரைக்காலுக்கு அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:20 PM
ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்ட தோ்தல் பறக்கும் படையினா்.
பகிர்:

காரைக்காலுக்கு அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இந்நாளில் காரைக்கால் மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரசாரம் செய்ய பாஜக தமிழக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை ஹெலிகாப்டரில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி தளத்துக்கு வந்திறங்கினாா்.

அப்போது அங்கு வந்த தோ்தல் பறக்கும் படையினா், ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனா். சுமாா் 10 நிமிடம் சோதனை நடத்திவிட்டு அவா்கள் புறப்பட்டனா்.

Advertisement

வரும் வியாழக்கிழமை (ஏப். 9) பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்டத்தில் பணியமா்த்தப்பட்டிருக்கும் பறக்கும் படையினா் உள்ளிட்ட அனைத்து நிலை கண்காணிப்புக் குழுவினா் தீவிரமான பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments