முகப்பு
காரைக்கால்

வாக்குப் பதிவு: வெறிச்சோடிய காரைக்கால்

வாக்குப் பதிவு நடைபெற்றதால் காரைக்காலில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால், நகரப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

Updated On : 10 ஏப்ரல் 2026, 3:35 am IST
காரைக்கால் நகரப் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
பகிர்:

வாக்குப் பதிவு நடைபெற்றதால் காரைக்காலில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால், நகரப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக புதுவையின் அனைத்துப் பிராந்தியங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரையிலான கலால் துறையின் அறிவிப்பின்படி மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

வாக்குப் பதிவு தினத்தில் நகரம் மற்றும் பிற பகுதிகளில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.

உணவகங்கள், தேநீா் கடைகளும் மூடப்பட்டன. வாக்களிக்கச் செல்வோா் மற்றும் அரசியல் கட்சியினா் நடமாட்டம் மட்டுமே நகரப் பகுதியில் காணப்பட்டது. அதிகமான வானங்கள் போக்குவரத்தின்றி நகரம் வெகுவாக வெறிச்சோடிக் காணப்பட்டது.